ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இது உங்களுக்கே நியாயமா? - இளம் நடிகையுடன் ரொமான்டிக்காக மது அருந்திய பாலகிருஷ்ணா - சர்ச்சைக்குள்ளான புகைப்படம்

இது உங்களுக்கே நியாயமா? - இளம் நடிகையுடன் ரொமான்டிக்காக மது அருந்திய பாலகிருஷ்ணா - சர்ச்சைக்குள்ளான புகைப்படம்

பாலகிருஷ்ணாவுடன் ஹனி ரோஸ்

பாலகிருஷ்ணாவுடன் ஹனி ரோஸ்

முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர் இப்படி நடந்துகொள்வது கவலையளிப்பதாக வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் குமாரின் துணிவு படங்கள் மோதிக்கொண்டதைப் போல தெலுங்கில் மூத்த நடிகர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படங்களும் சங்கராந்திக்கு மோதிக்கொண்டன. இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இரண்டு படங்களும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ்,கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார்.

வீர சிம்ஹா ரெட்டி படத்தின் வெற்றிவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சிகரமான உடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விழாவில் பாலகிருஷ்ணாவும் ஹனி ரோஸூம் கைகோர்த்து ஷாம்பியனை மிகவும் ரொமான்டிக்காக குடித்தனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர். அவர் எம்.எல்.ஏவாகவும் இருந்துவருகிறார். இந்த நிலையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர் இப்படி நடந்துகொள்வது கவலையளிப்பதாக வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

First published:

Tags: Nandamuri Balakrishna