ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிரஞ்சீவியின் காட் ஃபாதருடன் மோதும் நாகார்ஜுனாவின் கோஸ்ட்... டோலிவுட்டில் பரபரப்பு

சிரஞ்சீவியின் காட் ஃபாதருடன் மோதும் நாகார்ஜுனாவின் கோஸ்ட்... டோலிவுட்டில் பரபரப்பு

கோஸ்ட் - காட் ஃபாதர்

கோஸ்ட் - காட் ஃபாதர்

காட்ஃபாதர், கோஸ்ட் என 2 படங்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் சிரஞ்சீவி, நாகார்ஜுனாவின் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. இதனால் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  அக்டோபர் 5 ஆம் தேதியான நாளை மறுதினம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள காட் ஃபாதர் திரைப்படமும், நாகார்ஜுனாவின் கோஸ்ட் திரைப்படமும் வெளியாகவுள்ளன.

  இரு படங்களின் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. விடுமுறை நாட்களை குறி வைத்து இவ்விரு படங்களும் திரைக் களத்தில் இறங்கவுள்ளன.

  விமர்சனங்களை தாண்டி யூடியூபில் சாதனை படைத்த ஆதிபுருஷ் டீசர்…

  இதில் காட் ஃபாதர் திரைப்படம், மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக்காகும். மலையாளத்தில் மோகன் லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் சல்மான் கான், நயன்தாரா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

  ' isDesktop="true" id="812918" youtubeid="9GPaj0OW-No" category="cinema">

  காட்ஃபாதர் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சிரஞ்சீவிக்கு கடைசியாக வெளிவந்த ஆச்சார்யா, அதற்கு முன்பு வெளியான சைரா உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் காட்ஃபாதர் திரைப்படத்தின் மீது சிரஞ்சீவி அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளார்.

  கோஸ்ட் படத்தில் ஹீரோவாக நாகார்ஜுனா நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் நார்த் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

  Ratchan - Trailer | வெளியானது நாகர்ஜுனாவின் இரட்சன் : தி கோஸ்ட் படத்தின் ட்ரெய்லர்!

  இதில் நாகார்ஜுனாவுடன் குல்பனாக், சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், மனிஷ் சவுத்ரி, ரவி வர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சென்டிமென்ட் கலந்த முழு நீள ஆக்சன் படமாக கோஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் ட்ரெய்லரும் கவரும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

  ' isDesktop="true" id="812918" youtubeid="01bClKi10QA" category="cinema">

  பிரவீன் சாத்தரு இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசை மார்க் ராபின். ஒளிப்பதிவு தர்மேந்திர ககரளா. காட்ஃபாதர், கோஸ்ட் என 2 படங்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.v

  Published by:Musthak
  First published:

  Tags: Tollywood