Home /News /entertainment /

சமந்தாவை பிரிந்த பின்னர் பிரபல நடிகையுடன் காதலில் விழுந்தாரா நாக சைதன்யா? தெலுங்கு சினிமாவில் பரபரப்பு

சமந்தாவை பிரிந்த பின்னர் பிரபல நடிகையுடன் காதலில் விழுந்தாரா நாக சைதன்யா? தெலுங்கு சினிமாவில் பரபரப்பு

சோபிதா - நாக சைதன்யா

சோபிதா - நாக சைதன்யா

Naga Chaitanya Sobhita : மீண்டும் நாக சைதன்யா காதலில் விழுந்திருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 –ல் திருமணம் முடித்தார்.

    4 ஆண்டுகள் நீடித்த இந்த உறவு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவுக்கு உள்ளானது. தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    Also read... வசூலில் கலக்கும் வீட்ல விசேஷம்... 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 

    மேட் இன் ஹெவன் என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சோபிதா துலிபாலா. நாக சைதன்யாவின் புதிய வீட்டில் அவரும் சோபிதாவும் டேட்டிங் செய்வதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஐதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா பிரமாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதனை சோபிதாவுக்கு சுற்றிக் காண்பித்ததாகவும், சில மணி நேரங்களுக்கு பின்னர் இருவரும் காரில் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Also read... தமிழகத்தில் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விக்ரம் படம்! 

    இதேபோன்று சமீபத்தில் வெளியாகி ஹிட்டடடித்துள்ள மேஜர் படத்திலும் சோபிதா இடம்பெற்றுள்ளார். இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த ஓட்டலுக்கு நாக சைதன்யா அடிக்கடி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    மீண்டும் நாக சைதன்யா காதலில் விழுந்திருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Tollywood

    அடுத்த செய்தி