ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மெளன ராகத்தின் ரீமேக் படமா 'ராஜாராணி'? வில்லங்க கேள்விக்கு கூலாக பதிலளித்த மோகன்!

மெளன ராகத்தின் ரீமேக் படமா 'ராஜாராணி'? வில்லங்க கேள்விக்கு கூலாக பதிலளித்த மோகன்!

மெளனராகம் - ராஜா ராணி

மெளனராகம் - ராஜா ராணி

ராஜாராணி திரைப்படம் ஒருபுறம் ரசிகர்களிடையே சக்கைப்போடு போட்டாலும் சரிக்கு சமமான விமர்சனத்துக்குள்ளும் சிக்கியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

  சமீபத்தில் சூப்பர் ஹிட்டை ருசிக்காத ஷாருக் அட்லியின் ஜவான் படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதேபோல் ஷாருக்கின் ரசிகர்களும் இப்படத்துக்காக காத்திருக்கின்றனர். தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டாரை இயக்கும் அளவுக்குச் சென்றுவிட்ட அட்லீ இயக்குநர் ஷங்கரிடம் துணை இயக்குநராக வேலை பார்த்தார். பின்னர் சில குறும்படங்களை இயக்கிய அவர், ஆர்யா, ஜெய், நயன் தாரா, நஸ்ரியா, சந்தானம் ஆகியோரை வைத்து ராஜாராணி என்ற திரைப்படத்தை இயக்கினார். அழகான காதலை மையமாகக் கொண்டு உருவான ராஜாராணி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப்படத்தில் ரீச்சே அட்லீக்கு அடுத்தடுத்து விஜய் படத்தையும் பெற்றுக்கொடுத்தது.

  ராஜாராணி

  தொடரும் விமர்சனம்..

  ராஜாராணி திரைப்படம் ஒருபுறம் ரசிகர்களிடையே சக்கைப்போடு போட்டாலும் சரிக்கு சமமான விமர்சனத்துக்குள்ளும் சிக்கியது. ராஜாராணி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெளனராகத்தின் கதை தழுவலாகவே உள்ளதாகவும், கிட்டத்தட்ட காப்பி கேட் மூவிதான் ராஜாராணி எனவும் பலரும் விமர்சனம் செய்தனர். அதேவேளையில் கதையில் சாயல்கள் ஒருபோல இருப்பது சாதாரண விஷயம்தான் மக்களிடத்தில் புதிதாக சென்றுசேர்வதே வெற்றி என்றும் அட்லிக்கு ஆதரவுக்குரலும் எழுந்தன.

  Also Read: ரஜினி.. விஜய்.. விஜய் சேதுபதி..! ஷாருக்கானுக்காக கூடிய கூட்டம்! நெகிழ்ந்துபோன ஷாருக்!

  மோகன்..

  2013ம் ஆண்டு வெளியான ராஜாராணி படம் குறித்து தற்போது நடிகர் மோகன் பேசியுள்ளார். புதுப்படம் ஒன்றின் விளம்பரத்துக்காக செய்தியாளர்களைச் சந்தித்தார் மோகன். அவரிடம் கேள்விகேட்ட செய்தியாளர் ஒருவர், ''நீங்க நடிச்ச மெளனராகம் ரீமேக் செய்யப்பட்டு ராஜாராணினு எடுத்தாங்க. அந்தப்படம் பார்த்தீங்களா? எப்படி இருந்தது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோகன், அந்தப்படம் நான் பாக்கல. ஆனால் நீங்க எல்லாரும் பாத்து இருக்கீங்க. அதனாலதான் அந்தப்படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கு என்றார். இதற்கிடையே மோகனின் அருகில் இருந்த சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் ராஜாராணி ரீமேக் படமில்லை என செய்தியாளர்களுக்கு தெளிவாக்கினர்.

  Published by:Murugadoss C
  First published: