ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''எய்ட்ஸ் வந்து செத்து போய்ட்டேனா? மாலையோடு வந்தாங்க..'' மனம் நொந்து பேசிய மோகன்!

''எய்ட்ஸ் வந்து செத்து போய்ட்டேனா? மாலையோடு வந்தாங்க..'' மனம் நொந்து பேசிய மோகன்!

நடிகர் மோகன்

நடிகர் மோகன்

ஒரு வதந்தி எனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது. வீட்டிலும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நான் இறந்து விட்டேன் என்று வதந்தி காரணமாக ரசிகர்கள் வீட்டிற்கு மாலையோடு வந்துவிட்டார்கள். அந்த நிகழ்வு எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று நடிகர் மோகன் கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது-

  ஒரு காலகட்டத்தில் நாளொன்றுக்கு 20 மணி நேரம், 22 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக எனது படங்கள் ரிலீசாகி கொண்டிருந்தன. நான் ஒரு சில படங்களில் தான் பாடகர் கேரக்டரில் நடித்து இருக்கிறேன்.

  பொதுவாக படங்கள் நன்றாக வருவதற்கு, பாடல்கள் முக்கிய காரணம். என்னுடைய படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் மோகன் நடித்தால் பாடல்கள் நன்றாக இருக்கும், படமும் நன்றாக இருக்கும் என்ற பெயர் ஏற்பட்டது.

  சினிமா மட்டுமல்ல. வாழ்க்கை என்றாலே போராட்டம் சுக துக்கங்கள் இருக்கும். சினிமாவில் எந்த அளவுக்கு நான் போராடினேன் என்று எனக்கு தெரியவில்லை. கடவுள் புண்ணியத்தால், நல்ல மனிதர்களின் தொடர்பால் எனக்கு சினிமாவில் பெரிய போராட்டங்கள் ஏற்படவில்லை.

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  முதல்படமே ஹிட்டானதால் அடுத்தடுத்த படங்களுக்கு எனக்கு சிரமம் ஏற்படவில்லை. எனது முதல் படத்தில், கமல்ஹாசன், பாலுமகேந்திரா போன்ற பெரிய கலைஞர்கள் இருந்தனர். அதனால் எனக்கு தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் இருந்தும் அழைப்பு வந்தது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நான் தென்னிந்திய மொழிகளில் நடத்தி முடித்தேன்.

  என்னைப்பற்றி 90களில் வதந்திகள் வந்து கொண்டே இருந்தன. அது எனக்கு பழகிப் போனது. எனக்கு எய்ட்ஸ் இருப்பதாகவும் வதந்தி பரப்பினார்கள். ஆனால் என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான், என்னை பற்றி நன்றாக தெரியும்.

  ரஜினி, விஜய் வரிசையில் சிவகார்த்திகேயன்… பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியன் பாராட்டு…

  இந்த வதந்தி எனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது. வீட்டிலும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ஒரு வதந்தி காரணமாக, நான் இறந்து விட்டேன் என்று ரசிகர்கள் வீட்டிற்கு மாலையோடு வந்துவிட்டார்கள். அந்த நிகழ்வு எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர்களிடம் நான் உயிரோடு இருக்கிறேன் என்று சொல்லி வழி அனுப்பி வைத்தோம்.

  அதன் பின்னர் ரசிகர்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தார்கள். நான் குடிக்க மாட்டேன், சிகரெட் பிடிக்க மாட்டேன், யோகா செய்வேன். இதையெல்லாம் கடைபிடித்தால் இளமையுடன் இருக்கலாம் வாழ்க்கை. மிக எளிமையானது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Published by:Musthak
  First published: