எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என தகவல்கள் பரவியுள்ளன.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக இணைந்துள்ளது. இதில் சற்று மாற்றமாக முந்தைய படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக அனிருத் இசையமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க :
காலத்தால் அழியாத பாடல்கள்... தென்னிந்திய சினிமாவின் இசையரசி பி.சுசிலாவின் திரைப் பயணம்
கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 24-ம்தேதி வலிமை திரைப்படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அடுத்த படத்தில் அஜித் நெகடிவ் கேரக்டரில் நடிப்பார் என்று எச்.வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் மரைக்காயர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித், அங்கு மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன், நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க :
தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற ரேக்ளா ரேஸ்... ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்ட பந்தயம்
இந்த சூழலில், அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால் நடிப்பார் என்று தற்போது தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனை ஏறக்குறைய உறுதி செய்யும் வகையில், மோகன் லால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது.
முன்பு விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்து மோகன் லால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருப்பார். இதனால், அஜித் படத்தில் அவர் நடித்தால் படம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
அஜித்தின் அடுத்த படத்தில் இடம்பெறும் நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகவுள்ளது. ஹீரோயினாக தபு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.