முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அந்த மாதிரி படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் - மிர்ச்சி சிவா!

அந்த மாதிரி படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் - மிர்ச்சி சிவா!

மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிவா எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினிகாந்த் தான் என கூறினார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் ஆபாச காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் என நடிகர் மிர்ச்சி சிவா கூறியுள்ளார்.

மிர்ச்சி சிவா தற்போது சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் நடிகர்கள் மிர்ச்சி சிவா, ஷாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாடகர் மனோ, நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய மிர்ச்சி சிவா,  இந்த திரைப்படம் லாஜிக்கற்கு அப்பாற்பட்டு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த திரைப்படத்தின் கதை புதுமையாக இருந்தது, மேலும் தனக்கு ஏற்ற வகையில் இருந்ததால் இந்த திரைப்படத்தை தேர்வு செய்து நடித்ததாகவும் மிர்ச்சி சிவா கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் கேள்விக்கு நகைச்சுவையாக பதில்களை கூறினார்.  அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.  அதற்கு பதில் அளித்த சிவா எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினிகாந்த் தான் என கூறினார். அதேபோல் இரட்டை அர்த்த வசனம் கொண்ட காட்சிகள் மற்றும் ஆபாச காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும் நீங்களும் ஒரே போல் இருப்பது போன்ற மீம்ஸ் வருகிறது என்ற கேள்விக்கு, அவரைப் போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என்னை போல் அவரால் நடனம் ஆட முடியாது என நகைச்சுவையாக தெரிவித்தார். இது தவிர பல்வேறு கேள்விகளுக்கு தன்னுடைய பாணியில் மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் பேசுகையில், தற்போதைய சூழலில் சினிமா வியாபாரம் மாற்றம் கண்டுள்ளது.  அதில் முன்னணி நடிகர்களின் படங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  சிறிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதன் காரணமாகவே இந்த திரைப்படம் வெளியாகுவதிலும் சிக்கல் ஏற்பட்டு தாமதமானதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment