புதுமண தம்பதிக்கு 2 கேன் பெட்ரோலை பரிசளித்த நடிகர் மயில்சாமி!

பெட்ரோல் வழங்கும் மயில்சாமி

பெட்ரோல் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் முயற்சியில், இரண்டு கேன்களில் பெட்ரோலை பரிசளித்ததாக தெரிவித்தார்.

 • Share this:
  புதுமண தம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசளித்திருக்கிறார் நடிகர் மயில்சாமி.

  தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். புதுமண தம்பதியை வாழ்த்துவதற்காக மேடைக்குச் சென்ற நடிகர், மிகவும் அசாதாரண திருமண பரிசுகளில் ஒன்றான 5 லிட்டர் பெட்ரோலை வழங்கினார். விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன.

  மயில்சாமி புதுமண தம்பதியருக்கு பெட்ரோல் வழங்கிய விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் முயற்சியில், இரண்டு கேன்களில் பெட்ரோலை பரிசளித்ததாக தெரிவித்தார். அதோடு, பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைத்ததற்காக தமிழக அரசையும் அவர் பாராட்டியுள்ளார். அதே நேரத்தில் மத்திய அரசு இந்த பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மயில்சாமி போட்டியிட்டார். அங்கு திமுக-வின் ஏஎம்வி பிரபாகர் ராஜா, மக்கள் நீதி மய்யத்தின் பாடலாசிரியர் சினேகன், அதிமுகவின் விருகை ரவி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் திமுக-வின் பிரபாகர் ராஜா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: