விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர் மாதிரி...! புகழ்ந்து பேசிய மயில்சாமி

விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர் மாதிரி...! புகழ்ந்து பேசிய மயில்சாமி
நடிகர் மயில்சாமி
  • News18
  • Last Updated: October 24, 2019, 4:09 PM IST
  • Share this:
விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

எம்.ஜே. உசேன் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, மனிஷா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அல்டி'. ஷேக் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ், விஜய் சேதுபதி, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மயில்சாமி, இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி.
எனது இரு மகன்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகனின் பொறுமையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். அவன் நடிக்கும் 10-வது படம் இது. ஆனால் இதுதான் அவனது முதல் இசைவெளியீட்டு விழா. ஜாகுவார் தங்கம் கூறியதுபோல், விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி. பலர் கூறுவார்கள் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று. ஆனால், நான் கூறுவேன் அவர் இறக்கவில்லை. யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். தான்.

நடிகர் விஜய்சேதுபதி பேசும் போது, "மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார். மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவார்கள்.

மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி வெற்றியடைய வேண்டும் என்றார்.

வீடியோ பார்க்க: பிகில் வியாபாரம் உண்மை நிலவரம் என்ன?

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading