முகப்பு /செய்தி /entertainment / ”மாப்ள நா சொல்றத கேளு மாப்ள ”.. மயில்சாமி கடைசியாக டப்பிங் பேசிய வீடியோ வைரல்..!

”மாப்ள நா சொல்றத கேளு மாப்ள ”.. மயில்சாமி கடைசியாக டப்பிங் பேசிய வீடியோ வைரல்..!

கடைசியாக டப்பிங் பேசும் மயில்சாமி

கடைசியாக டப்பிங் பேசும் மயில்சாமி

Actor Mayilsamy Recent Video | மயில்சாமியின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி  சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அதிகாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மயில்சாமியின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் கடைசியாக படம் ஒன்றுக்கு டப்பிங் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. கிளாஸ்மேட்ஸ் என்ற படத்திற்கு டப்பிங் பேசும் மயில்சாமி, ””மாப்புள்ள நா சொல்றத கேளு மாப்புள்ள ”  என  உரையாடும் காட்சிக்கு டப்பிங் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: Mayilsamy, Viral Video