முகப்பு /செய்தி /entertainment / நடிகர் மயில்சாமி உடல் வடபழனி மயானத்தில் தகனம்..

நடிகர் மயில்சாமி உடல் வடபழனி மயானத்தில் தகனம்..

மயில்சாமி

மயில்சாமி

Actor Mayilsamy funeral | மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் வழிநேடுக்கிலும் பொதுமக்கள் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி ஏவிஎம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற நடிகர் மயில்சாமி  மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்துகொண்டார். கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு இல்லம் திரும்பியுள்ளார். காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்துள்ளது. அப்போது இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகுதான் நெஞ்சு வலிக்கிறது என்று கூறியுள்ளார்.

குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.

மயில்சாமியின்  உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மயில்சாமி சிவன் பக்தர் என்பதால் அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும் முன்னர் அவருடைய இல்லத்தில் சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்தனர். சண்டி மேளம் அடித்து சிவனடியார்கள் சிவபுராணத்தை பாடி நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தினர்.

மயில்சாமி இறுதிஊர்வலம்

மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் அவரின் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.  எம்.ஜி.ஆர் பாடல்கள், மேளதாளத்துடன் மயில்சாமியின் இறுதி ஊர்வலம்  அபுசாலி, 80 அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக மயில்சாமியில் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இறுதி ஊர்வலம் செல்லும் வழியில் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர்.வடபழனி ஏவிஎம் மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

First published:

Tags: Mayilsamy