Home /News /entertainment /

‘’விமானங்களில் தமிழ் பேசும் பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்’’ – நடிகர் மயில்சாமி கோரிக்கை

‘’விமானங்களில் தமிழ் பேசும் பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்’’ – நடிகர் மயில்சாமி கோரிக்கை

நடிகர் மயில்சாமி

நடிகர் மயில்சாமி

Hindi Row : இந்தி தேசிய மொழியாக இருந்தால் கற்றுக் கொள்வேன். அது இன்னொரு மாநிலத்தின் மொழி. அதை நான் ஏன் கற்க வேண்டும் – மயில்சாமி

    தமிழகத்தில் இயங்கும் விமானங்களில் தமிழ் பேசத் தெரிந்த பெண்களை வேலைக்கு அமர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் மயில்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் மயில்சாமி கலந்துகொண்டார்.  அதில் பேசிய மயில்சாமி கோவையிலிருந்து சென்னை விமான பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்தார்.

    அப்போது விமானத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாமல் நான் கஷ்டப்பட்டேன். எனவே,  தமிழகத்தில் சுற்றும் விமானங்களில் தமிழ் தெரிந்த பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று உங்கள் வாயிலாக தந்தைக்கு (மு.க.ஸ்டாலின்) கோரிக்கை வைக்கிறேன் என கூறினார்.

    Also read... கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை 

    இந்தி தேசிய மொழியாக இருந்தால் கற்றுக் கொள்வேன்.  அது இன்னொரு மாநிலத்தின் மொழி.  அதை நான் ஏன் கற்க வேண்டும் எனவும் மயில்சாமி கேள்வி எழுப்பினார்.  குறுகிய காலத்தில் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதை ஏற்கமுடியாது.  ஆங்கிலம் உலக மொழி அதனால் அனைவரும் கற்கின்றனர் எனவும் மயில்சாமி கூறினார்.

    முன்னதாக பேசிய படக்குழுவினர் பலரும், நெஞ்சுக்கு நீதி படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதேபோல் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில், ‘’நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அவர் தயாரிப்பில் நான் இயக்கிய கனா திரைப்படத்தின் வெற்றிதான் தனக்கு அடையாளத்தைக் கொடுத்தது.  அதன்மூலமே நெஞ்சுக்கு நீதி திரைப்படம் எனக்கு கிடைத்தது.

    இதையும் படிங்க - ராக்கி பாய் போல ஒரு மூச்சில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

    நெஞ்சுக்கு நீதி  திரைப்படத்தைப் பார்த்து, நாம் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாமே என்று யாராவது, எங்காவது சின்னதாக யோசித்தால் அதுதான் எங்கள் குழுவினருக்கு கிடைத்த விருது.’’ என்றார்
    Published by:Musthak
    First published:

    Tags: Mayilsamy

    அடுத்த செய்தி