பிரபல நடிகர் மாறன் கொரோனாவால் மரணம்... திரையுலகினர் சோகம்

நடிகர் மாறன்

நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 • Share this:
  பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  நடிகர் விஜய் நடித்த குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் அவருக்கு நண்பராக சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் மாறன். அந்த படங்களை தொடர்ந்து மேலும் சில தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். நடிகர் மாறன் செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வந்தார்.

  நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பலனின்றி நடிகர் மாறன் இன்று காலை உயிரிழந்துள்ளார். நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நேற்று மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது  கொரோனா தொற்றால் நடிகர் மாறன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Also Read : Thenandal Films Murali: மாரடைப்பால் ’மெர்சல்’ தயாரிப்பாளர் முரளி மருத்துவமனையில் அனுமதி

  செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2419 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 19 கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

  செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது 13038 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: