முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

நடிகர் ம்ன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

நடிகர் ம்ன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சிக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

  • Last Updated :

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சிக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீடு அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டியிருப்பதால் மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மன்சூர் அலிகான் வீட்டை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளுக்கு முன் 2400 சதுர அடி நிலத்தை அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி ஆகியோர், தன்னிடம் விற்று விட்டதாகவும், பிறகு அது அரசு புறம்போக்கு நிலம் எனவும் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நிலத்தை தன்னிடம் விற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் மன்சூர் அலிகான் 2019 ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் அப்போதே தள்ளுபடி செய்துள்ளது.

இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தை மீட்க சொல்லிய உத்தரவின் பேரில் மண்டலம் 8, கோட்டம் 105 மாநகராட்சி அதிகாரிகளால் நடிகர் மன்சூர் அலிகான் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

First published:

Tags: Actor Mansoor ali khan