முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் சங்கம் சார்பில் போண்டாமணியை சந்தித்து நிதி உதவி வழங்கிய மனோபாலா

நடிகர் சங்கம் சார்பில் போண்டாமணியை சந்தித்து நிதி உதவி வழங்கிய மனோபாலா

நடிகர் போண்டாமணி, நடிகர் மனோபாலா

நடிகர் போண்டாமணி, நடிகர் மனோபாலா

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் போண்டாமணி. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டாமணியை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மனோபாலா சந்தித்து நிதி உதவி வழங்கி நலம் விசாரித்தார். 

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் போண்டாமணி.  ஈழத்தமிழரான இவர், சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வடிவேலுவுடன் இவர்  இணைந்து நடித்த பல காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் அவரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து மிக மோசமான கட்டத்தில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என நேற்று தகவல்கள் பரவின.  இதைத் தொடர்ந்து அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்க அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மனோபாலா ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார். அத்துடன் நிதி உதவியும் வழங்கினர்.

மேலும் அவர் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்தார். அப்போது போண்டா மணியின் சிறுநீரக பகுதில் பாதிப்பு இருந்ததால் மூச்சு திணறல் மற்றும் நெச்சு வலி இருந்துள்ளது.

Also read... மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதிராஜா

தற்போது நல்ல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைவார் என்றும் மருத்துவர் கூறியுள்ளார். போண்டா மணி இந்த பிரச்னைக்கு ஏற்கனவே சிகிச்சை எடுத்துகொண்டுள்ளார்.

ஆனால் அவர் மருத்துவர்கள் கூறியது போல் தொடர் சிகிச்சை எடுத்துகொள்ளவில்லை. படப்பிடிப்பு இருப்பதாக கூறி சென்றுவிடுவார் என்று மருத்துவமனையில்  கூறுகின்றனர். ஆனால் இந்த முறை மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துகொண்டு செல்வதாக கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Entertainment