மறக்க முடியாத மணிவண்ணன்...! ஒரு நினைவுப் பகிர்வு

மறைந்த இயக்குனர் மணிவண்ணன் 67வது பிறந்த நாளையொட்டி, ரசிகர்கள் பலரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

மறக்க முடியாத மணிவண்ணன்...! ஒரு நினைவுப் பகிர்வு
நடிகர் மணிவண்ணன்
  • News18
  • Last Updated: July 31, 2020, 8:38 PM IST
  • Share this:
தமிழ் சினிமா ரசிகர்கள் யாராலும் அமைதிப்படை அமாவாசை கதாபாத்திரத்தை மறந்துவிட முடியாது. அரசியல் நிகழ்வுகள் எதுவாகினும் அம்மாவாசை உடன் இன்றளவும் தொடர்பு படுத்தப்பட்டு பேசப்படுகிறது. அந்த அளவு தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவோடு இரண்டற கடந்துவிட்ட அம்மாவாசை கதாபாத்திரத்தை உருவாக்கிய மணிவண்ணன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு சக்தி.

கோவை சூலூரில் பிறந்த குசும்புக்காரரான மணிவண்ணன், தமிழ் சினிமாவில் இயக்குனர், கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பல அவதாரங்களில் முத்திரை பதித்துள்ளார்.

பிறந்தது முதலே அரசியலுடன் நெருங்கிய தொடர்புடைய மணிவண்ணன் தனது இளமைக்காலத்தில் கம்யூனிச கட்சிகளோடு நெருக்கமான ஈடுபாடு காட்டினர். பின் பாரதிராஜாவால் வசீகரிக்கப்பட்டு திரை உலகத்திற்குள் நுழைந்த மணிவண்ணன், நிழல்கள் திரைப்படத்தின் கதை ஆசிரியராக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.


காலத்தால் அழிக்க முடியாத அலைகள் ஓய்வதில்லை கதையை எழுதிய மணிவண்ணன் தொடர்ந்து கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய மணிவண்ணன் காட்சிக்கு காட்சி அரசியல் பேசியே அமைதிப்படை திரைப்படம் அவரின் ஆகச்சிறந்த அடையாளம்.

நூறாவது நாள் திரைப்படத்தை சிறந்த திரில்லர் திரைப்படமாகவும், பாலைவன ரோஜாக்கள். பாட்டாளி தோழன் என பல ஜனரஞ்சகமான திரைப்படங்களையும் இயக்கி உள்ள மணிவண்ணன், தொண்ணூறுகளின் காலகட்டத்தில் வெளியான எல்லா திரைப்படங்களிலும் வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என ஏதோ ஒரு பாத்திரத்தில் நீக்கமற நிறைந்திருந்தார்.

இலங்கை போர் உச்சத்தில் இருந்தபோது தமிழீழ அரசியலில் தீவிரம் காட்டிய மணிவண்ணன், அவர் நம்பிய அரசியலை மேடை தோரும் முழங்கினார். தமிழ் தேசியம் தொடர்பான ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று தனது கடைசி ஆசை நிறைவேறாமலே இந்த மண்ணைவிட்டு பிரிந்து விட்டார் அந்த மாபெரும் கலைஞன். 
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading