Home /News /entertainment /

CBI 5 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மம்முட்டி!

CBI 5 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மம்முட்டி!

மம்முட்டி

மம்முட்டி

முதல் நான்கு பாகங்களின் கதையை எழுதிய எஸ்.என்.சுவாமி கதையை எழுத, மது இந்தப் படத்தை இயக்குகிறார்.

சிபிஐ டைரிக்குறிப்பு படத்தின் ஐந்தாம் பாகம் மம்முட்டி நடிப்பில் தயாராகி வருகிறது. அஃபிஷியல் லீக் என்று படத்தின் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் ஒரு படத்தின் ஐந்தாம் பாகம் தயாராவது இதுவே முதல்முறை. 1988 இல் ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு வெளியானது. இதில் மம்முட்டி சேதுராம ஐயர் என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு பெண்ணின் சந்தேகத்துக்குரிய தற்கொலையை அவர் துப்பறிந்து உண்மையை கண்டறிவதுதான் கதை. இதன் இரண்டாம் பாகமாக ஜாக்ரதா திரைப்படம் 1989 இல் வெளியானது. இதுவும் ஒரு மர்டர் மிஸ்ட்ஜா திரைப்படம்தான். அதையடுத்து 2004 இல் சேதுராம ஐயர் சிபிஐ படமும், 2005 இல் நேரறியான் சிபிஐ படமும் வெளியாயின. நீண்ட இடைவெளிக்குப் பின் ஐந்தாவது பாகத்தை சென்ற வருட இறுதியில் ஆரம்பித்தனர்.

இந்த ஐந்து பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க, அவரது சக அதிகாரிகளாக முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நடிக்கின்றனர். ஜெயதி ஸ்ரீகுமார் விபத்தில் சிக்கி உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் இந்த ஐந்தாவது பாகத்தில் அவரை வைத்து சில காட்சிகளே எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

முதல் நான்கு பாகங்களின் கதையை எழுதிய எஸ்.என்.சுவாமி கதையை எழுத, மது படத்தை இயக்குகிறார். ஜேக்ஸ் பிஜோய் ஐந்தாம் பாகத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு அகில் ஜார்ஜ். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இந்த ஐந்தாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை அஃபிஷியல் லீக் என்ற பெயரில் மம்முட்டி
பகிர்ந்திருந்தார். அதில் பின்புறம் கை கட்டியபடி சேதுராம ஐயரின் முதுகுப்புற தோற்றம் வெளியாகியிருந்தது. பின்புறம் கை கட்டியபடி நடப்பது சேதுராம ஐயர் கதாபாத்திரத்தின் தனித்த மேனரிசங்களில் ஒன்று.

நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?

மம்முட்டி நடிப்பில் பிப்ரவரி 24 பீஷ்மபர்வம் திரைப்படம் வெளியாகிறது. அதையடுத்து அவர் நடித்திருக்கும் புழு திரைப்படம் திரைக்கு வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Mammootty

அடுத்த செய்தி