நடிகர் பூ ராமுவின் மறைவுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தார். இருப்பினும் பூ படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தைத் தந்தது.
அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார். குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி பிரின்சிபலாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் அப்பாவாகவும், கர்ணன் படத்தில் தனுஷின் அப்பாவாகவும் நடித்திருந்தார்.
‘கும்பளங்கி நைட்ஸ்’ நடிகை அம்பிகா ராவ் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய ராமு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமு, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு திரையுலகினர் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் ராமுவுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து, "தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான பூ ராமுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். நண்பகல் நேரத்து மயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.