Home /News /entertainment /

விக்ரம் படத்திற்கு பாராட்டு மழை பொழிந்த மகேஷ் பாபு… இயக்குனர் லோகேஷை சந்திக்க விருப்பம்

விக்ரம் படத்திற்கு பாராட்டு மழை பொழிந்த மகேஷ் பாபு… இயக்குனர் லோகேஷை சந்திக்க விருப்பம்

நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு

Mahesh Babu on Vikram : தியேட்டர் ரிலீஸில் மட்டும் சுமார் ரூ. 500 கோடியை விக்ரம் எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்ரம் படத்தை பார்த்து, தெலுங்கு முன்னணி நட்சத்திரம் மகேஷ் பாபு பாராட்டு மழை பொழிந்துள்ளார். ஒட்டுமொத்த விக்ரம் படமும் எப்படி எடுக்கப்பட்டது என்பதை, அறிந்து கொள்வதற்காக இயக்குனர் லோகேஷை சந்தித்து பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாது-

    விக்ரம் ஒரு ப்ளாக் பஸ்டர் சினிமா. நவீன காலத்தின் மிகச் சிறந்த படைப்பு. இந்தப் படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டு அறிந்து கொள்ள விருப்பமாக உள்ளேன். விக்ரம் மெய் மறக்கச் செய்யும், உணர்ச்சிப்பூர்வமான படம். சகோதரர் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள்.

    இதையும் படிங்க - விக்ரம் – பா. ரஞ்சித் படத்தின் புதிய தகவல்…. கேரக்டர் குறித்த சூப்பர் அப்டேட்

    விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் அற்புதமாக நடித்திருந்தார்கள். இதற்கு மேல் சிறப்பாக நடிக்கவே முடியாது என்ற அளவுக்கு அவர்களது உழைப்பு இருந்தது. சிறந்தவொரு பின்னணி இசையை அனிருத் கொடுத்துள்ளார். விக்ரம் பட பாடல்கள் என்னுடைய ப்ளே லிஸ்ட்டில் நீண்ட காலம் இருக்கும்.



    கடைசியாக லெஜெண்ட் கமல்சாரைப் பற்றி. அவரைப் பற்றி விமர்சனம் எழுத எனக்கு தகுதி கிடையாது. அவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற அடிப்படையில் இது எனக்கு பெருமை மிகுந்த தருணம். கமல்சார் உங்ளுக்கும், உங்களது டீமுக்கும் வாழ்த்துக்கள் சார்.

    இவ்வாறு மகேஷ் பாபு கூறியுள்ளார்.

    கமல், சூர்யா, பகத் பாசில், விஜய்சேதுபதி என மல்டி ஸ்டார்களைக் கொண்டு உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வாரங்களைக் கடந்த நிலையில் வார இறுதி நாட்களில் இந்தப் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுகிறது.

    இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ

    உலக அளவில் இந்தப் படம் ரூ. 400 கோடி வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் மட்டும் சுமார் ரூ. 500 கோடியை விக்ரம் எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி