ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலிவுட் கனவு நிறைவேறியது.. மகிழ்ச்சியில் நடிகர் மகத்!

பாலிவுட் கனவு நிறைவேறியது.. மகிழ்ச்சியில் நடிகர் மகத்!

நடிகர் மகத்

நடிகர் மகத்

திரைப்படம் பார்வையாளர்களுக்கு மகிழ்விப்பதை விட, அவர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே விருப்பம் என நடிகர் மகத் கூறியுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Double XL திரைப்படம் மூலமாக இந்தியில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு நிறைவேறி இருக்கிறது என நடிகர் மகத் கூறியுள்ளார். 

நடிகர் சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான மகத் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பின் சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து வந்தார். இறுதியாக எமோஜி என்ற இணைய தொடரில் நாயகனா நடித்திருந்தார்.

பிறந்தநாளன்று ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் !

இந்த நிலையில் சோனாக்ஷி சிங்கா, ஹூமா குரோஷி ஆகியோர் நடிப்பில் உருவாகும் Double XL என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். உலகில் உள்ள அனைவருக்கும் தன் உடல் மேல் ஒரு கட்டத்தில் விமர்சனம் எழும். குறிப்பாக தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும்.  அதை உடைக்கும் வகையில் இந்த Double XL திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.  இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு நிறைவேறி இருப்பதாக மகத் கூறியுள்ளார்.

' isDesktop="true" id="827024" youtubeid="cQmQy-Wu72g" category="cinema">

அத்துடன் திரைப்படங்கள் பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட,  அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணியாக இருக்க வேண்டும் என்று நம்புவதாகவும், அந்த வகையிலான திரைப்படமாக Double XL திரைப்படம் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.  இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார். அந்த பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor Mahat, Bollywood