Home /News /entertainment /

ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகும் மாதவன் திரைப்படம்!

ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகும் மாதவன் திரைப்படம்!

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

Actor Madhavan: ISRO இல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் மாதவன் எழுதி இயக்கி நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
மாதவன் முதல் முறையாக இயக்கி நடித்திருக்கும் ராக்கெட்ரி தி நம்பி எபெக் திரைப்படம் ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகிறது. அதன் வெளியீட்டு தேதியையும் மாதவன் அறிவித்துள்ளார்.

நடிகராக உச்சத்தில் இருந்தபோது சாக்லேட் பாய் இமேஜை மாற்ற, நடிப்பிற்கு சிறுது இடைவெளி விட்டு, தனது உடம்பை மெருகேற்றி இறுதிச்சுற்று திரைப்படத்தில் மாதவன் நடித்தார். அது அவரது நடிப்பு வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இப்போது இன்னொரு தளத்திற்கு மாதவன் சென்றுள்ளார். ISRO இல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் மாதவன் எழுதி இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பும் அவரே.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்ற நம்பி நாராயணன் ISRO இல் பணியாற்றி வந்தார். விஞ்ஞானியான அவர் நமது நாட்டு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பலவருட போராட்டங்களுக்கு பிறகே நம்பி நாராயணனால் தன்னுடைய நிரபராதித்துவத்தை நிரூபிக்க முடிந்தது. அவர் நடத்திய சட்டப் போராட்டம் முக்கியமானது . இதனை தான் மாதவன் திரைப்படமாக எடுத்துள்ளார்

இதில் அவர் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். நியூஜெர்சி பல்கலைக்கழகத்தில் பயின்றது முதல் நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டது வரையான சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன. மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். மாதவன் மற்றும் அவரது மனைவியின் ட்ரை கலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக மாதவன் அறிவித்துள்ளார். ஆங்கிலம் தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.



Also read... சூப்பர் ஹீரோவாக தோனியின் அடுத்த அவதாரம்... வைரலாகும் மோஷன் போஸ்டர்!

ஒரே நேரத்தில் இந்தி, தமிழில் படத்தை மாதவன் இயக்கியுள்ளார். இந்த இரு மொழிகளுக்கு ஏற்ப நடிகர்களையும் அவர் தனித்தனியே தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார். இந்தியாவில் இந்த வருடம் வெளியாக இருக்கும் திரைப்படங்களில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக ராக்கெட்ரி தி நம்பி எபெக்டும் உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Madhavan

அடுத்த செய்தி