• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவன் மகன்

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவன் மகன்

வேதாந்த் மாதவன்

வேதாந்த் மாதவன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

  • Share this:
    நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

    தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என இப்போது வரை அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். சின்னத்திரையில் நடிக்க தொடங்கி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது சிறகை விரித்தார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மாதவனின் மகனும் தற்போது சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

    அவரது மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். நீச்ச்சல் போட்டியின் மீது ஆர்வம் கொண்ட 16 வயதான வேதாந்த், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற 47-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார்.

    பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற அவர், 4 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். வேதாந்தின் சாதனைக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று வேதாந்த் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: