Home /News /entertainment /

நீச்சல் போட்டியில் புதிய சாதனைப் படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த்!

நீச்சல் போட்டியில் புதிய சாதனைப் படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த்!

வேதாந்த் மாதவன்

வேதாந்த் மாதவன்

நல்ல வேகத்துடன் திறமையாக முன்னோக்கி நீந்திய வேதாந்த், 16:01.73 வினாடிகளில் 2017-ஆம் ஆண்டில் தனது மாநில சக போட்டியாளர் அத்வைத் 16:06.43 வினாடிகளின் உருவாக்கிய சாதனையை முறியடித்தார்.

    தனது மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் போட்டியில் சாதனைப் படைத்திருக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவன். 

    புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உள்ள பிஜு பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்று வரும் 48-வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய திரைப்பட நடிகர் ஆர்.மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் ஆண்களுக்கான குரூப் 1, 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

    நல்ல வேகத்துடன் திறமையாக முன்னோக்கி நீந்திய வேதாந்த், 16:01.73 வினாடிகளில் 2017-ஆம் ஆண்டில் தனது மாநில சக போட்டியாளர் அத்வைத் 16:06.43 வினாடிகளின் உருவாக்கிய சாதனையை முறியடித்தார். 16:21.98 வினாடிகளில் நீந்திய கர்நாடகாவின் அமோக் ஆனந்த் வெங்கடேஷையும், 16:34.06 வினாடிகளில் இலக்கை தொட்ட பெங்கால் வீரர் சுபோஜித் குப்தாவையும் வீழ்த்தி வெண்கலம் வென்றார் வேதாந்த்.



    தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட மாதவன், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் வேதாந்திற்கும் அவரது தந்தை மாதவனுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Madhavan

    அடுத்த செய்தி