Home /News /entertainment /

ஒலிம்பிக்கில் மகன் பங்கேற்பதற்காக துபாய்க்கு குடிபெயரும் நடிகர் மாதவன்

ஒலிம்பிக்கில் மகன் பங்கேற்பதற்காக துபாய்க்கு குடிபெயரும் நடிகர் மாதவன்

நீச்சல் போட்டியில் வீரமான திகழும் வேதாந்த், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார்.

    ஒலிம்பிக்கில் தன்னுடைய மகன் சிறப்பான திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் மாதவன் துபாயில் குடிபெயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் மாதவனுக்கு 16 வயதில் வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் போட்டியில் வீரமாக திகழும் வேதாந்த், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினார். அவர் 2026-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

    இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் நீச்சல் குளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் குடும்பத்தினருடன் துபாய் சென்று குடியேறப் போவதாக கூறியுள்ளார்.

    செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மாதவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. நானும், எனது மனைவியும் மகன் வேதாந்துடன் துபாயில் இருக்கிறேன். இங்கு வேதாந்தால் சிறந்த நீச்சல் குளங்களில் பயிற்சி பெற முடியும். வேதாந்த் தனது ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வருகிறார். அவருக்கு தேவையான உதவிகளை நானும், எனது மனைவி சரிதாவும் செய்து வருகிறோம்.

    இதையும் படிங்க : மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி என்னாச்சு? திமுக அரசுக்கு ஓ. பன்னீர் செல்வம் கேள்வி

    உலக அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை குவித்து, வேதாந்த் எனக்கு பெருமை தேடித் தந்துள்ளார். சுற்றிலும் உள்ளவர்களை நன்றாக கவனித்துக் கொள்வதற்கு உங்கள் பிள்ளைகளை பழக்கப்படுத்துங்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

    இவ்வாறு மாதவன் கூறினார். மாதவன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் ரீமேக் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் மாதவன் கேரக்டரில் சைஃப் அலி கான் நடித்து வருகிறார்.

    இதையும் படிங்க : குழாய் சண்டை: பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய பாஜக நிர்வாகி
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Madhavan

    அடுத்த செய்தி