என்னுடைய பொதுத்தேர்வு மதிப்பெண் இவ்வளவு தான்...! மாணவர்களுக்கு மாதவன் வாழ்த்து

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகியிருக்கும் நிலையில் தனது மதிப்பெண்ணை வெளிப்படையாக அறிவித்து மாணர்வகளுக்கு மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்னுடைய பொதுத்தேர்வு மதிப்பெண் இவ்வளவு தான்...! மாணவர்களுக்கு மாதவன் வாழ்த்து
மாதவன்
  • Share this:
தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றது. முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

திருப்பூர் 97.12 சதவிகிதமும், ஈரோடு 96.99 சதவிகிதமும், கோவை 96.39 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தமாக 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 94.80% மாணவிகள், 89.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 5.3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் நடிகர் மாதவன், “தற்போது தேர்வு முடிவுகளை பெற்றிருப்பவர்களுக்கு.. தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..
மீதமுள்ளவர்களுக்கு, நான் என்னுடைய பள்ளித்தேர்வில் 58 சதவீதம் தான் மதிப்பெண் பெற்றேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் நண்பர்களே” என்று தெரிவித்திருக்கிறார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading