• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Madhavan : உலகை ஆளப்போகிறவர் போல் இருக்கிறார்- மாதவன் யாரை சொல்கிறார்? 

Actor Madhavan : உலகை ஆளப்போகிறவர் போல் இருக்கிறார்- மாதவன் யாரை சொல்கிறார்? 

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

Vikram Vedha Hindi Remake : நடிகர் மாதவன் தனது ட்விட்டரில், உலகை ஆளப்போகிறவர் போல் இருக்கிறார் என இந்தி நடிகரை பாராட்டியுள்ளார். 

  • Share this:
    நடிகர் மாதவனின் இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பெயர் வாங்கித் தந்த இரு படங்கள் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா. விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதி அதிகம் ஸ்கோர் செய்தாலும் அதற்கு இணையாக என்கவுண்டர் போலீசாக மிரட்டியிருந்தார் மாதவன். இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக்காகிறது. சமீபத்தில் துபாயில் இதன் படப்பிடிப்பை தொடங்கினர். தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரியே இந்தி ரீமேக்கையும் இயக்குகின்றனர். 

    விக்ரம் வேதாவில் மாதவன் நடித்த வேடத்தில் சயிப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் ஹிர்த்திக் ரோஷனும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் ராதிகா ஆப்தேயும் நடிக்கின்றனர். தமிழில் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட், குல்சன் குமாரின் டி சீரிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்தி ரீமேக்கை தயாரிக்கிறார்

    also read : தாப்ஸி படத்தின் கதைக்காக நந்தா பெரியசாமியை பாராட்டிய மிஷ்கின்..

    இதன் படப்பிடிப்பு தளத்துக்கு சமீபத்தில் விசிட் அடித்தார் நடிகர் மாதவன். தயாரிப்பாளருடன் செல்பி எடுத்துக் கொண்ட மாதவன், 'ஹிர்த்திக் ரோஷன், உலகையே ஆளப்போகிறவர் போல் இருக்கிறார்' என வியந்து பாராட்டியுள்ளார். முதலில் இந்த வேடத்தில் அமீர் கான் நடிப்பதாகத்தான் இருந்தது. அவர் கேட்டபடி ஹாங்காங் பின்னணியில் படத்தின் கதையை திருத்தி எழுதினர். கொரோனா இரண்டாம் அலையால் ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போக, அமீர் கான் படத்திலிருந்து விலகினார். இப்போது ஹிர்த்திக் ரோஷன் அவருக்குப் பதில் நடித்து வருகிறார். விக்ரம் வேதாவுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத்தே இந்த ரீமேக்குக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: