• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று

நடிகர் மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் தனது குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி போடும் பணி ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திரைபிரபலங்கள் பலரும் தாங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட் என பாலிவுட் பிரபலங்களும் பலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தமிழில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நடிகர் மாதவன் தனது குடும்பத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    சமீபத்தில் மாதவன் இயக்கி நடித்திருக்கும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994-ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை 'Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார்.

    நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என்று கூறிய நீதிமன்றம் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

    கேரளாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் அரசுக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்று அவருக்கு அத்தொகை அவருக்கு வழங்கப்பட்டது.

    நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: