மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் நாடாளுமன்றத்தில் சிறப்பு காட்சியாக நேற்று திரையிடப்பட்டது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் நடிகர் மாதவன் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு சினிமா துறையினர், பிரபலங்கள் என ஏராளமானோர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 1ம் தேதி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஓடிடி வெளியீட்டிலும் அதிக பார்வைகளை பெற்று வருகிறது.
மாதவனின் ராக்கெட்ரி – நம்பி விளைவு படத்திற்கு சீமான் பாராட்டு…
இந்நிலையில் ராக்கெட்ரி திரைப்படம் நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இந்த படத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.
இதுகுறித்து மாதவன் அளித்துள்ள பேட்டியில், ‘நாடாளுமன்றத்தில் எனது திரைப்படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டதை நான் பெருமையாக உணர்கிறேன். அதே நேரத்தில் எனக்கு சிறி பதற்றமாகவும் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு படத்தை திரையிடுவது என்பது சாதாரணமாக நடப்பது கிடையாது. என்னால் இங்கு நடப்பதை நம்ப முடியவில்லை. ராக்கெட்ரி படத்திற்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் உண்மையில் எப்படிப்பட்டவர்? விஜய் டிவி பிரபலத்தின் வைரல் பதிவு!
ராக்கெட்ரி படத்தின் மூலம் மாதவன் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தையும் அவரே தயாரித்திருக்கிறார். எந்தவித முன் அனுபவமும் இல்லாமல், சிறப்பாக படத்தை இயக்கியதற்காக மாதவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ராக்கெட்ரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். பிரான்ஸ், கனடா, செர்பியா,ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படமாக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.