மதரீதியாக கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்!

எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றவார் என நம்புகிறேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: August 16, 2019, 4:07 PM IST
மதரீதியாக கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்!
நடிகர் மாதவன்
Web Desk | news18
Updated: August 16, 2019, 4:07 PM IST
ட்விட்டரில் மத ரீதியாக கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் மாதவன்.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ராக்கெட்ரி நம்பி விளைவு.

இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது. . நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டத்தைத் தனது வீட்டில் கொண்டாடினார் மாதவன். அந்தப் புகைப்படங்களைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.அந்தப் புகைப்படத்தில் மாதவன் வீட்டில் இந்துக் கடவுள்கள் புகைப்படத்துடன் சிலுவையும் இருந்தது.

Loading...அதைக் குறிப்பிட்டு ரசிகை ஒருவர், "பின்னணியில் ஏன் இந்து கடவுள்களுடன்  சிலுவை இருக்கிறது.அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம்" என்று விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு காட்டமாக சமூக வலைதளத்தில் மாதவன் பதிலளித்துள்ளார்.  அதில், உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அந்த புகைப்படத்தில் உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.மேலும், தர்காக்களில் இருந்து ஆசி நான் பெற்றுள்ளேன். உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஆசி பெற்றுள்ளேன். கடவுள்களின் படம் சில பரிசாக வந்தது, சில வாங்கியவை என்று தெரிவித்த மாதவன் என் வீட்டில் அனைத்து மதங்களும் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனது பால்ய பருவத்திலிருந்தே எனக்கு இது கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்றும் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

Also see...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...