கொரோனா இரண்டாம் அலையில், பெரிதும் பாதிக்கப்பட்ட நாம், நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரும் நமக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளோம். ஒரு பக்கம் மருத்துவமனையில் இடம் இல்லாமல், ஆக்சிஜன் இல்லாமல் பலர் துடித்துக்கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் மயானத்தில் பிணங்களை எரிக்க இடம் இல்லாமல், திணறிக்கொண்டிருந்தனர்.
இவை அனைத்துக்கும், எல்லாம் சரியாகிவிட்டது என்று நாம் நினைத்து அலட்சியமாக இருந்ததே முக்கிய காரணம். இன்னும், இந்த பெருந்தொற்று, நம்மை கடந்து போகவில்லை, எப்போதும் மீண்டும் வரலாம் என்பதால், விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்த, மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த்தோடு நீண்டகாலமாக பணிபுரிந்த குழுவினர் மூன்று நிமிட குறும்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
இதனை கே.வி.ஆனந்திடம் முதல் உதவி இயக்குநராக பணியாற்றிய ககா இயக்கியுள்ளார். ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

’ஐ கான்ட் ப்ரீத்’ கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட நடிகர் மாதவன்!
Also read: அது அல்லவா இது - குழப்பத்தை ஏற்படுத்திய சிம்பு படத்தின் பர்ஸ்ட் லுக்!
மாஸ்க் அணிய வேண்டிய அவசியத்தை மொழி கடந்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ’ஐ கான்ட் ப்ரீத்’ என்ற அந்த குறும்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஜிட்டோ சென்னை முன்னெடுத்த இந்த குறுகிய வீடியோவை, டாக்டர் சூரபனேனி கிருஷ்ண மோகன் தயாரிக்க, லைஃப் செல் மற்றும் மெட்ரோ மைண்ட்ஸ் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ’ஐ கான்ட் ப்ரீத்’ குறும்படத்தை நடிகர் மாதவன், ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகை மடோனா செபாஸ்டியன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவை மெட்ரோ மைண்ட்ஸ் யூட்யூப் சேனலில் காணலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.