Home /News /entertainment /

விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாதவன்... 

விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாதவன்... 

ரஜினிகாந்த்துடன் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்திப்பு

ரஜினிகாந்த்துடன் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்திப்பு

மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்’ என்ற திரைப்படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டது.

    விஞ்ஞானி நம்பி நாராயணன் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நேரில் சந்தித்து நடிகர் மாதவன் வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று, அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

    மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்’ என்ற திரைப்படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.

    இதனை நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கியிருந்தார். ராக்கெட்ரி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும், குறிப்பாக இளைஞர்கள் பார்க்கவேண்டும் என்று கூறி பாராட்டு தெரிவித்து இருந்தார்.

    ஓடிடியில் ரிலீஸாகும் அமலா பால் தயாரித்து நடித்திருக்கும் ’கடாவர்’..

    மேலும் ராக்கெட்ரி படத்தை எடுத்ததற்காக மாதவனை பாராட்டிய ரஜினிகாந்த், தனது முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுக்கு இணையாக மாதவன் படத்தை உருவாக்கியுள்ளார் என்று கூறியிருந்தார்.



    தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் கடந்த 1-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ராக்கெட்ரி படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள்.

    மல்டி ஸ்டார் திரைப்படங்களில் நிச்சயம் நடிப்பேன் - அதர்வா

    இந்த நிலையில் நடிகர் மாதவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது விஞ்ஞானி நம்பி நாராயணனும் உடனிருந்தார். இது தொடர்பாக மாதவன் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று அதிக விருப்பங்களை பெற்று வருகிறது
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Madhavan, Rajinikanth

    அடுத்த செய்தி