விஞ்ஞானி நம்பி நாராயணனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
விஞ்ஞானிகள் நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி: நம்பி எபெக்ட் என்ற திரைப்படத்தை மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நடிகர் மாதவன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நம்பி நாராயணனை அனைவரும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. எனவே, மக்களிடம் நம்பி நாராயணனை கொண்டு செல்லவே இந்த திரைப்படத்தை எடுத்ததாக தெரிவித்தார்.
மேலும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என்று இருப்பது மிகப்பெரிய பொறுப்பு! அது கடினமாக இருந்ததாகவும் அவர் கூறினார். நம்பி நாராயணன் தன்னுடைய சிறை சிறை அனுபவங்களை எந்த இடத்திலும் பகிர்ந்துகொள்ளவில்லை. குறிப்பாக அவர் பற்றிய புத்தகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த திரைப்படத்தை வியாபாரத்தை முக்கியத்துவப்படுத்தி எடுக்கவில்லை.
இதையும் படிங்க - ‘வருங்கால முதல்வர் விஜய்’ – கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மதுரையை கலக்கும் போஸ்டர்
பணத்தை முன்னிலைப்படுத்தி இருந்தால் இறுதிச்சுற்று, விக்ரம்வேதா போன்ற திரைப்படங்களை எடுத்து இருப்பேன். ஆனால் முழுக்க முழுக்க நம்பி நாராயணனை பற்றி கூற வேண்டும் என்ற எண்ணத்திலேயே ராக்கெட்ரி திரைப்படத்தை எடுத்து இருக்கிறேன் என மாதவன் தெரிவித்தார்.
இந்த திரைப்படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அதிலும் சூர்யா, சூர்யாவாகவே நடித்திருக்கிறார். இதற்காக அவர்கள் இருவரும் சம்பளம் பெறவில்லை எனவும் மாதவன் கூறினார்.
இதையும் படிங்க - நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்
இந்த திரைப்படத்திற்காக 15 நாட்களில், 12 கிலோ உடல்எடை ஏற்றி இறக்கி நடித்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் ராக்கெட்ரி திரைப்படம் உருவான விதம் குறித்து, படம் வெளியான பிறகு வீடியோ வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக இயக்குநரும், நடிகருமான மாதவன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.