Madhavan: ’லிங்குசாமியின் படத்தில் நடிக்கவில்லை’ மாதவன் மறுப்பு

நடிகர் மாதவன்

மாதவன் 'மல்டி ஹீரோ' கதையில் நடித்திருந்தாலும் வில்லனாக நடித்ததில்லை.

  • Share this:
    லிங்குசாமியின் தெலுங்குப் படத்தில் நடிப்பதாக வந்த செய்தியை நடிகர் மாதவன் மறுத்துள்ளார்.

    சண்டக்கோழி 2 படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ராம் பொத்னியேனி நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இதுவொரு போலீஸ் கதை. ராம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மாதவன் வில்லனாக நடிப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    மாதவன் 'மல்டி ஹீரோ' கதையில் நடித்திருந்தாலும் வில்லனாக நடித்ததில்லை. தொடர்ந்து நாயகனாக நடிக்க வாய்ப்புகள் வருகையில் அவர் எதற்கு ராம் போன்ற ஒரு நடிகரின் படத்தில் வில்லனாக வேண்டும்? இந்த கேள்விக்கு பதிலளித்தவர்கள், லிங்குசாமியின் ரன் படம்தான் மாதவனின் சாக்லெட் பாய் இமேஜை மாற்றியது. தவிர அவரது வேட்டை படத்திலும் நடித்துள்ளார். லிங்குசாமி மீது மாதவனுக்கு இருக்கும் மரியாதை காரணமாக வில்லனாக நடிக்கிறார் என்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், இவை எதுவும் உண்மையில்லை. "லிங்குசாமி படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர் நல்ல மனிதரும் கூட. ஆனால், அவர் படத்தில் நான் நடிப்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை" என மாதவன் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

    லிங்குசாமி முதலில் அல்லு அர்ஜுனை இயக்குவதாக தான் இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் கால்ஷீட் தர முடியாமல் போக, ராமை வைத்து படமெடுக்கிறார். தெலுங்கு, தமிழ் இருமொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: