Home /News /entertainment /

வித்தியாசமான அசுரன் நீ.. நடிகர் மாதவன் யாரை இப்படி பாராட்டினார் தெரியுமா?

வித்தியாசமான அசுரன் நீ.. நடிகர் மாதவன் யாரை இப்படி பாராட்டினார் தெரியுமா?

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

"அவர் ஒரு வித்தியாசமான அசுரனாக மாறிவிடுவார். அவர் ஒரு தனித்துவமான நடிகர். எப்போதுமே சிறப்பான விஷயங்களை செய்கிறவர்" என பாராட்டியுள்ளார்.

புராணங்களில் இருந்த அசுரர், அரக்கர் சித்தரிப்புகள் நவீன யுகத்தில் மாறிவிட்டன. சிறந்தவைகளையும், தீமைகளை அழிப்பவர்களையும் அசுரன், அரக்கன் என பேச ஆரம்பித்துள்ளனர். வெற்றிமாறனின் அசுரன் ஓர் உதாரணம். மாதவனும் சயிப் அலிகானை வித்தியாசமான அசுரன் என பாராட்டியுள்ளார்.

மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரியே இந்தி ரீமேக்கையும் இயக்குகின்றனர். ஹிர்த்திக் ரோஷன் விஜய் சேதுபதி நடித்த வேடத்திலும், சயிப் அலிகான் மாதவன் நடித்த வேடத்திலும் நடிக்கின்றனர். படத்தின் முதல் ஷெட்யூல்ட் அபுதாபியில் படமாக்கப்பட்டது. ஹிர்த்திக் ரோஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. மாதவன் படப்பிடிப்புதளத்துக்கு சென்று ஹிர்த்திக்கை பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க.. நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

தற்போது சயிப் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகளை லக்னோவில் படமாக்கியுள்ளனர். மொத்தம் 19 தினங்கள் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. தனது வேடத்தில் சயிப் அலிகான் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த மாதவன், "சயிப் அலிகான் ஒரு வேடத்தில் தனது இதயத்தையும் மனத்தையும்  செலுத்தினால் அவர் ஒரு வித்தியாசமான அசுரனாக மாறிவிடுவார். அவர் ஒரு தனித்துவமான நடிகர். எப்போதுமே சிறப்பான விஷயங்களை செய்கிறவர்" என பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க.. யசோதா படத்தில் வித்தியாசமான வேடத்தில் சமந்தா!



இந்த இந்தி ரீமேக் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதே மாதம் 9 ஆம் தேதி ஹிர்த்திக் ரோஷன் நடித்துவரும் பைட்டர் திரைப்படமும் திரைக்கு வருவது முக்கியமானது.

 
Published by:Sreeja
First published:

Tags: Actor Madhavan, Bollywood, Kollywood

அடுத்த செய்தி