நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு அல்லிநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான். இவருக்கு வயது 43. 3 அடி உயரம் உள்ள இவர், வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
இவர் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியை முடித்து விட்டு தூங்க சென்ற லிட்டில் ஜான், மறுநாள் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் அவர் இருந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது லிட்டில் ஜான் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.
நடுவர் குழு பாரபட்சமானது - விஜய் டிவியை வெளுத்து வாங்கி சவால் விட்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை
இதையடுத்து லிட்டில் ஜானின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான அல்லிநாயக்கன் பாளையத்தில் நடைப்பெற்றது. இதில் கலைக்குழுவைச் சேர்ந்த பலர் கலந்துக் கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.