முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காஷ்மீரில் லெஜெண்ட் சரவணன்… புதிய திரைப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு

காஷ்மீரில் லெஜெண்ட் சரவணன்… புதிய திரைப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு

லெஜெண்ட் சரவணன்

லெஜெண்ட் சரவணன்

விஜய் நடிக்கும் லியோபடத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகரும், தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சரவணனின் காஷ்மீர் பயணம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு தொழிலதிபர் சரவணன் அதிரடியாக நுழைந்தார். இந்த படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தி லெஜெண்ட் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இருப்பினும் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தி லெஜெண்ட் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக சரவணன் கூறியிருந்தார். இந்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சரவணன் காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஓட்டல் அறை மற்றும் காஷ்மீரில் பனி விழும் காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் இறுதியில் பூலோகத்தின் சொர்க்கம் காஷ்மீர் என்று வியந்து கூறியுள்ளார் சரவணன்.  அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவுக்கு ரசிகர்கள் தாறுமாறாக கமென்ட் செய்து வருகின்றனர். விஜய் நடிக்கும் லியோபடத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. ஒருவேளை அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சரவணன் காஷ்மீர் சென்றுள்ளாரா என்று ரசிகர்கள் யூக கருத்துக்களை கூறியுள்ளனர்.

First published:

Tags: Legend Saravanan