ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குஷ்புவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் சிகிச்சை! விவரத்தை ட்வீட் செய்த நடிகை!

குஷ்புவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் சிகிச்சை! விவரத்தை ட்வீட் செய்த நடிகை!

குஷ்பு

குஷ்பு

Actor kushboo : சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியோ பிஸியாக உள்ளார் குஷ்பு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முதுகெலும்பு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போதுதான் வீடு திரும்பி இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் நடிகை குஷ்பு.

  தமிழ் சினிமாவின் பான்-இந்தியா ஸ்டார் நடிகைகள் லிஸ்டில் குஷ்புவும் இருக்கிறார். தனது அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். எந்த நடிகைக்கும் கட்டாத அளவுக்கு குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர் ரசிகர்கள். தொழில் முனைவர், தயாரிப்பாளர், சீரியல் நடிகை என்று பல வித அவதாரங்களை எடுத்த குஷ்பு தற்போது சீரியல்களை எழுதி அதில் நடித்தும் வருகிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Kushboo Sundar (@khushsundar)  இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு, சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியோ பிஸியாக உள்ளார். அதே போல சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்.

  இதையும் படிங்க: இயக்குநர் ராமின் உதவியாளர் இயக்கியுள்ள பருந்தாகுது ஊர்க்குருவி!

  பன்முகத்தன்மை கொண்ட நடிகை குஷ்பு சமீப காலமாக தனது உடல் நலத்தில் மிகுந்த கவனம் கொண்டு எடையை குறைத்தார். குஷ்புவா இது என வாயைப்பிளக்கும் அளவுக்கு உடல் எடையை கடுமையாக குறைத்தார். சினிமா, அரசியல் என பிஸியாக இருந்தாலும் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட்டு வருகிறார் குஷ்பு. சமீபத்தில் கணவர் சுந்தர் உடன் துபாய் பறந்த குஷ்பு சில போட்டோக்களையும் பதிவிட்டு இருந்தார்.

  இந்நிலையில் தற்போது ரசிகர்களை சோகமடைய செய்யும் அளவுக்கு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் குஷ்பு. முதுகெலும்பு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போதுதான் வீடு திரும்பி இருப்பதாக அவரது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பிவிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ள குஷ்பு, அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் போஸ்டுக்கு ரிப்ளை செய்துள்ள பலரும் விரைவில் குணமடைய வேண்டுமென பதிவிட்டு வருகின்றனர்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Kushboo