கொரோனா லாக்டவுனில் காதலியை கரம்பிடித்த கும்கி அஸ்வின்

கொரோனா லாக்டவுனில் நடிகர் கும்கி அஸ்வினின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.

கொரோனா லாக்டவுனில் காதலியை கரம்பிடித்த கும்கி அஸ்வின்
நடிகர் கும்கி அஸ்வின் திருமணம்
  • Share this:
லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மகனாக நடித்திருந்த அஸ்வின், வந்தான் வென்றான், கும்கி, தில்லு முல்லு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

கும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வினை அந்தப் படத்துக்கு பின்னர் பலரும் கும்கி அஷ்வின் என்றே அழைத்து வந்தனர். இவரும் சென்னைக் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யா ஸ்ரீயும் காதலித்து வந்தனர். வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்துள்ளார். இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இதில் திரையுலக நண்பர்கள் யாருமின்றி அஸ்வின் - வித்யாஸ்ரீ இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழக அரசு விதித்திருக்கும் விதிமுறைகளை கடைபிடித்து இத்திருமணம் நடைபெற்றுள்ளது.


மேலும் படிக்க: அன்றும்... இன்றும்...! உடல் எடையைக் குறைத்து அசத்திய நடிகை வித்யுலேகா

பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத திரைபிரபலங்கள் பலரும் அஸ்வின் - வித்யா ஸ்ரீ தம்பதிக்கு போனிலும் சமூகவலைதளங்களின் வாயிலாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading