அஜித் குமாரிடம் நான் கற்றுக் கொள்ள விரும்புவது இதை மட்டும்தான் - கிருஷ்ணா ஓபன் டாக்

நான் ஒருமுறை அவரிடம் ஆளில்லா விமானங்கள் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்டேன்.

Web Desk | news18
Updated: July 30, 2019, 7:56 PM IST
அஜித் குமாரிடம் நான் கற்றுக் கொள்ள விரும்புவது இதை மட்டும்தான் - கிருஷ்ணா ஓபன் டாக்
அஜித் | கிருஷ்ணா
Web Desk | news18
Updated: July 30, 2019, 7:56 PM IST
அஜித் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் கிருஷ்ணா.

கழுகு 2 படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் கிருஷ்ணா, அஜித்துடனான தனது நட்பு குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “அஜித் ஒரு குழந்தை மனம் படைத்தவர்.  ஒரு விஷயம் கேட்டால் அதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு அதற்கான நேரம் வரும் பொழுது நிறைவேற்றுவார்.


நான் ஒருமுறை அவரிடம் ஆளில்லா விமானங்கள் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்டேன். நான் கேட்டு பல மாதங்கள் இருக்கும். ஆனால் அதை நினைவில் வைத்துக்கொண்டு அவர் அதற்கான வேலைகளில் ஈடுபடும் போது என் தொலைபேசி எண்ணை எனது அண்ணனிடம் கேட்டு எனக்கு அவரே போன் செய்து உங்களிடம் கொஞ்சம் பேசலாமா என்று கூறி வீட்டிற்கு வரச் சொன்னார். அங்கு ஆளில்லா விமானங்களை செய்து காட்டினார். சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. தேனீர், காபி என்று அன்லிமிட்டட் ஆக வந்து கொண்டே இருந்தது.

நான் அவரிடம் கற்றுக் கொள்ள நினைக்கும் நல்ல விஷயங்களில் ஒன்று இது தான். ஒருவர் தன்னிடம் சொல்வதையும், கற்றுக் கொள்ள நினைக்கும் விஷயங்களையும் அவர்களை நேரில் அழைத்து சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு சமயம் வரும் நேரத்தில் அதை நினைவு கூர்ந்து அழைப்பது என்பது மிகவும் பெரிய செயல்” என்றார்.

வீடியோ பார்க்க: பொன்னியின் செல்வனில் இணைந்த பார்த்திபன்!

Loading...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...