நடிகர் கிருஷ்ணாவை வில்லனாக்கிய இயக்குநர் கவுதம் மேனன்

ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக நடித்திருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கிருஷ்ணாவை வில்லனாக்கிய இயக்குநர் கவுதம் மேனன்
நடிகர் கிருஷ்ணா
  • Share this:
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா : இமைபோல் காக்க’.

இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் ‘நான் உன் ஜோஸ்வா’ என்ற பாடல் வீடியோ இன்று வெளியிடபட்டுள்ளது. இந்தப் பாடலின் மூலம் நடிகர் கிருஷ்ணா இந்தப் படத்தில் நடித்திருப்பது உறுதியானது.

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா ஜோஷ்வா: இமைபோல் காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் கவுதம் மேனன், “ஜோஷ்வா படத்தின் வில்லன் கிருஷ்ணாவை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது. எனக்காக இதை ஒப்புக்கொண்டதற்காக நடிகர் கிருஷ்ணாவுக்கு நன்றி. நீங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறீர்கள் ப்ரதர்” என்று தெரிவித்துள்ளார்.



கவுதம் மேனனின் இந்த ட்வீட்டுக்கு நடிகர் கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார். ஜோஷ்வா: இமைபோல் காக்க திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading