காந்தாரா படம் பார்க்காததற்கு ராஷ்மிகா மந்தனா ட்ரோல் செய்யப்பட்ட கேள்விக்கு நடிகர் சுதீப் நச்சென பதிலளித்துள்ளார்.
கிச்சா சுதீப் தன் மனதில் பட்டதை பேசுவதில் பெயர் பெற்றவர். சமீபத்தில், ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படத்தைப் பார்க்காததற்காக ராஷ்மிகா மந்தனா இணையத்தில் விமர்சிக்கப்பட்டதைப் பற்றி அவர் தனது எண்ணங்களை சமீபத்திய நேர்க்காணலில் பகிர்ந்து கொண்டார். தெலுங்கு போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்த சுதீப், என்ன நடந்தாலும் அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று கூறினார். மேலும், பிரபலங்கள் மீது முட்டை, தக்காளி, கற்கள் உள்ளிட்டவைகள் வீசப்படும் என்றும், இருப்பினும் அவர்கள் பொது நபர்களாக இருப்பதால் விமர்சனங்களை கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ராஷ்மிகா மந்தனா காந்தாரா படத்தைப் பார்க்கவில்லை என இணையத்தில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார். பின்னர் அதற்கு விளக்கமளித்து போஸ்ட்டும் போட்டிருந்தார் ராஷ்மிகா. இது குறித்து நேர்க்காணல் ஒன்றில் பேசிய சுதீப், “நீங்கள் எப்படி உலகை மாற்ற முடியும்? 15-20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றால், செய்தி சேனல்கள் எங்களை நேர்காணல் செய்தன. அந்த நேரத்தில் எல்லாம் மிகவும் புதியது. ஆனால் நீங்கள் டாக்டர் ராஜ்குமார் சார் காலத்துக்குச் சென்றால், அந்த நேரம் தூர்தர்ஷன் மற்றும் பேப்பர்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. அப்படியானால், மீடியா செய்திகளால் எல்லாமே தவறாகப் போகிறது. அதை நாம் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பொது நபராக இருந்தால், எப்போதும் மாலைகள் இருக்கும். அதோடு முட்டைகள், தக்காளிகள் மற்றும் கற்களும் எப்போதும் உங்களை நோக்கி வரும்.
2023-ல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்!
நாம் அதை எதிர்கொள்ள வலுவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது நடக்கும் என்று நமக்குத் தெரிந்தால், நாம் என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் அல்லது என்ன சொல்ல வேண்டும் என்பதில் அனைவரும் கவனம் கொள்ள வேண்டும். நீங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்க விரும்புகிறீர்கள். அதில் 2 - 10 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்க விரும்புகிறீர்கள், ஆனால் எதிர்மறையான விஷயம் உங்களுக்கு வேண்டாமா?” எனக் கேட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.