முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'டாடா' வெற்றி.. இறந்துபோன நண்பன்.. வெற்றி விழா மேடையில் உருக்கமாக பேசிய கவின்!

'டாடா' வெற்றி.. இறந்துபோன நண்பன்.. வெற்றி விழா மேடையில் உருக்கமாக பேசிய கவின்!

 கவின்

கவின்

'டாடா' படத்தின் வெற்றியை மணிகண்டன் என்ற மறைந்த தனது நண்பருக்காக அர்ப்பணிப்பதாக நடிகர் கவின் தெரிவித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கவின், அபர்ணாதாஸ்,பாக்யராஜ், விடிவி கணேஷ் ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான 'டாடா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, நடிகர் கவின் பேசுகையில், படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன். அதில், இது 12 வருட கனவு என தெரிவித்தேன். அதை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து எங்கிருந்தோ அழைத்து பேசிய அனைவருக்கும் நன்றி. சாதாரண மனிதர் அனுதினமும் தன்னை நம்பி தன் வேலையை நம்பி நேர்மையாக பணியாற்றினால் ஒருநாள் நாம் நினைக்கும் இடத்திற்கு சென்றிடலாம் என்ற நம்பிக்கையை ஆழமாக மனதில் விதைதற்கு நன்றி. 'டாடா' படம் ஒரு நம்பிக்கை. இங்கு மேடையில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை, அதை காப்பாற்றிய உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

என்மேல் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியுள்ளேன்னு நினைக்கிறேன். இந்த படத்தை எனது நண்பன் மணிகண்டன் என்பவருக்காக அர்ப்பணிக்கிறேன் அவர் தற்போது உயிரோடு இல்லை, அவருக்கு நான் அர்ப்பணிப்பதற்கு காரணம் முதன் முதலில் நான் தொலைக்காட்சியில் வரும் பொழுது விசில் அடித்து ரசித்தவன் அவன் தற்போது இருந்திருந்தால் கூட அவனைவிட மகிழ்ச்சியாக யாராலும் இருக்க முடியாது என்றார். அவருக்காக ஏதாவது பண்ண வேண்டும் என தோன்றியது அதற்காகத்தான் இது என கூறிய கவின்,எங்கிருந்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாய் என நம்புகிறேன் மச்சான் இந்த படம் உனக்காக என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kavin