Home /News /entertainment /

அஜித்தின் திரைப்பட தலைப்பில் நடிக்கும் நடிகர் கதிர்!

அஜித்தின் திரைப்பட தலைப்பில் நடிக்கும் நடிகர் கதிர்!

ஆசை

ஆசை

கதிருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உடன் பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தின் தலைப்பில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது. அந்த திரைப்படத்தில் கதிர் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் நடிக்கின்றனர். 

வசந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த திரைப்படம் ஆசை. இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்து இருந்தாலும் அதற்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கதிர் நடிக்கும் திரைப்படத்திற்கு ஆசை என தலைப்பு வைத்துள்ளனர். அந்த திரைப்படத்தை ஷிவ் மோஹா என்பவர் இயக்குகிறார்.

அதில் கதிருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உடன் பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.



Also read... பூஜையுடன் தொடங்கியது தனுஷின் கேப்டன் மில்லர் படம்!

இந்த நிலையில் கதிர் நடிக்கும் ஆசை திரைப்படத்திலும் அவர் இணைந்துள்ளார்.  காதல் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் தங்களுக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என படக் குழுவினர் நம்புகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Actor Kathir

அடுத்த செய்தி