Home /News /entertainment /

மலையாள இஷ்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் கதிர்

மலையாள இஷ்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் கதிர்

கதிர்

கதிர்

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை இந்தியில் நீரஜ் பாண்டே அமீர் கானின் மகனை வைத்து இயக்கி வருகிறார்.

மலையாளத்தில் 2019 இல் வெளியான திரைப்படம் இஷ்க். ரதீஷ் ரவியின் எழுத்தில் அனுராஜ் மனோகர் படத்தை இயக்கியிருந்தார்.
இஷ்க்கில் நாயகனாக ஷேன் நிகாமும், நாயகியாக ஆன் ஷீத்தலும் நடித்திருந்தனர். இரவு காரில் தனியாக இருக்கும் அவர்களை மப்டியில் இருக்கும் இரு போலீஸ்காரர்கள் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்கின்றனர்.

மனரீதியாக இருவரும் பாதிக்கப்படுகிறார்கள். தனியாக நாயகியிடம் அந்த போலீஸ்காரர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது நாயகனுக்கு தெரியவில்லை.இந்த சம்பவம் நடந்த பிறகு நாயகன் அந்த இரு போலீஸ்காரர்களையும் கண்டுபிடிக்கிறான். அவர்கள் போலீஸ்காரர்கள் அல்ல ஒருவன் டெய்லர், இன்னொருவன் ஆம்புலன்ஸ் டிரைவர் என்பது தெரிய வருகிறது.

இதையும் படிங்க... நிஜ சம்பவங்களை கையில் எடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல்! எதிர்ப்பும்.. ஆதரவும்

பிரதானமாக தங்களை டார்ச்சர் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரின் வீட்டிற்கு செல்லும் நாயகன் டிரைவர் இல்லாத நேரம் அவனது மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறான். ஆம்புலன்ஸ் டிரைவர் வருகிறான். அவனையும் சேர்த்து நாயகன் தனது சித்திரவதையை தொடர்கிறான். அடி உதை இல்லாத மனரீதியான சித்திரவதை.

இதையும் படிங்க.. பிக் பாஸில் பிரியங்காவை வெளியேற்ற முடிவு செய்த ராஜூ.. புரமோவில் அதிர்ச்சி!

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை இந்தியில் நீரஜ் பாண்டே அமீர் கானின் மகனை வைத்து இயக்கி வருகிறார். தெலுங்கில் இஷ்க் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். தற்போது தமிழில் கதிர் நடிக்க ரீமேக் செய்கின்றனர். பேச்சிலர் படத்தில் நடித்த திவ்யபாரதி நாயகியாக நடிக்கிறார். விரைவில் படத்தின் பெயர் மற்றும் விவரங்களை அறிவிக்க உள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actor Kathir, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி