• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கமலைப் புறக்கணித்தார்கள்: தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் - பாலிவுட் குறித்து கருணாஸ் ஆதங்கம்

கமலைப் புறக்கணித்தார்கள்: தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் - பாலிவுட் குறித்து கருணாஸ் ஆதங்கம்

கருணாஸ்

கருணாஸ்

புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர் என்று நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது பற்றி அந்தக் கட்சி தான் முடிவெடுக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் பிரச்சனை இன்று, நேற்று நடப்பதில்லை. நடிகர் கமல்ஹாசன் திரைப்படம் இந்தியில் வெற்றி பெற்றபோது அவர் தமிழர் என்பதற்காக வட இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை.

    புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர். தற்போது கூட தமிழகத்தில் உள்ள நகரங்களில் வட இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தினால் தமிழகத்தில் வட இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். இனி தமிழகத்தில் தமிழர்களுக்கு இடம் இருக்காது. இதேபோல்தான் ஏ.ஆர் ரகுமான் வட இந்தியர்களால் ஒதுக்கப்பட்டுள்ளார். சிலர் லைக்வேண்டும் என்பதற்காக எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதுபோன்று சொரி சிரங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் கருப்பர் கூட்டத்தினர்.

    சினிமாவில் குருபீசம் என்பது எப்போதும் உள்ளது. தமிழ் சினிமாவில் எப்போதும் சமூக கருத்துக்கள் வந்தது கிடையாது. இனி வரப்போவதும் கிடையாது. இங்கு அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காக தான் சினிமா எடுத்து வருகின்றனர். யாரும் சமூக கருத்துக்கு படம் எடுக்கவில்லை. கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், மக்களிடம் சுய கட்டுப்பாடு இல்லை’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: