உடல்நிலை சரியானதும் அந்தகன் படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

அந்தகன் குழுவினருடன் கார்த்திக்

சென்ற மாத இறுதியில் உடல்நலக்குறைவால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக், தற்போது அந்தகன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.

 • Share this:
  சென்ற மாத இறுதியில் உடல்நலக்குறைவால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக், தற்போது அந்தகன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.

  இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்த படம் அந்தாதுன். நிறைய விருதுகளையும் எக்கச்சக்க லாபத்தையும் சம்பாதித்த படம். இதனை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தியாராகராஜன் தயாரித்து இயக்குகிறார். அந்தகன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் பிரசாந்தும், ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் ப்ரியா ஆனந்தும், தபு நடித்த வேடத்தில் சிம்ரனும் நடிக்கின்றனர். கார்த்திக்கும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

  இதனிடையே சென்ற மாத இறுதியில் மூச்சுத்திணறல் காரணமாக கார்த்திக் சென்னையிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையும் கார்த்திக்குக்கு நடத்தப்பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படிப்படியாக உடல்நிலை தேறிய நிலையில், கார்த்திக் தற்போது அந்தகன் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

  பழைய உற்சாகத்துடன் அந்தகன் படப்பிடிப்புக்கு வந்த அவருக்கு தியாகராஜன், சிம்ரன், பிராந்த் உள்ளிட்டவர்கள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: