முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WWE-ல் ஜான் ஆபிரஹாமுடன் மோதும் நடிகர் கார்த்தி?

WWE-ல் ஜான் ஆபிரஹாமுடன் மோதும் நடிகர் கார்த்தி?

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி  மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோர் பங்கேற்ற புரமோ வீடியோவை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தற்போது நடிகர் கார்த்தி பங்கேற்ற புரமோ வீடியோவையும், ஜான் ஆபிரஹாம் பங்கேற்ற புரமோ வீடியோவையும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் நடித்துவரும் கார்த்தியின் படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றுவருகின்றன.

'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' என ஹாட்ரிக் வெற்றிகளுக்கு பிறகு ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. 'ஜப்பான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தலைப்பும் கார்த்தியின் தோற்றமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

'கைதி' படம் ஏற்படுத்திய தாக்கத்தால் அதன் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். 'தளபதி 67' படத்துக்கு பிறகு 'கைதி 2' படத்தைத் தொடங்கவிருப்பதாக இயக்குநர் லோகேஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். 'சர்தார்' படம் தொடர்பாக அளித்த பேட்டிகளில் கார்த்தியும் 'கைதி 2' விரைவில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் (WWE) நிகழ்ச்சிக்காக ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் நடிகர்கள் ஜான் ஆபிரஹாமும், கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிவித்திருந்தது. இதனையடுத்து இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா என ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

இதனிடையே தற்போது நடிகர் கார்த்தி  மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோர் பங்கேற்ற புரமோ வீடியோவை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதன் மூலம் தமிழுக்கான விளம்பர தூதராக நடிகர் கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

First published:

Tags: Actor Karthi, Japan, WWE