ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘சர்தார் – பிரின்ஸ் இரு படங்களும் வெற்றிபெற வேண்டும்’ – ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேச்சு

‘சர்தார் – பிரின்ஸ் இரு படங்களும் வெற்றிபெற வேண்டும்’ – ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேச்சு

சர்தார் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி

சர்தார் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி

நடிகைகள் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் சர்தார் படத்தில் பணி புரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி அடைய வேண்டும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது. அதில் நடிகர் கார்த்தி, நடிகைகள் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், இயக்குனர் பி.எஸ்.மித்ரன்,  தயாரிப்பாளர் லக்ஷ்மன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, மித்ரன் இயக்கிய இரும்புத்திரை படத்திற்கு பிறகு நமக்கு வரும் மெசேஜை பார்த்தாலே பயம் வரும். அந்த அளவிற்கு இரும்புத்திரை படம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அவர் 1980 காலகட்டத்தில், நாடக நடிகர் ஒருவர் ராணுவத்திற்கு சென்று உளவாளியாகிறான் என்ற ஒரு வரி கதையை கூறினார். அந்த ஐடியா மிகவும் பிடித்திருந்தது.  அதற்குப் பிறகு அந்தக் கதையை எழுதத் தொடங்கினார். கதை முழுமை அடைந்தபோதுதான்,  சர்தார் திரைப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியானது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இடம்பெற்றுள்ள ரஜினி படங்கள் லிஸ்ட்…

சர்தார் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ளோம். இந்த திரைப்படம் சிக்ஸ் பேக் இல்லாத, பிகினி இல்லாத ஒரு இந்தியன் உளவாளி படமாக இருக்கும். வெற்றி வேண்டுமென்று நினைத்தால், அதற்கு நீ தகுதியானவனா என்பதை பார் என அண்ணன் சூர்யா அடிக்கடி கூறுவார். அதற்கு ஏற்ற வகையில் இந்த படத்திற்காக கடினமாக உழைத்து உள்ளோம்.

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஒரே திரைப்படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். அந்த வகையில் நானும் இந்த திரைப்படத்தில் பல கெட்டப்பில் நடித்திருக்கிறேன். அது இந்த திரைப்படத்திற்கு தேவைப்பட்டது.  சர்தார் திரைப்படம் தன்னுடைய திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

' isDesktop="true" id="819331" youtubeid="8OQzz_i3KFE" category="cinema">

தீபாவளி பண்டிகைக்கு சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன.  இரண்டும் வேறு வேறு படங்கள், வேறு வேறு கேளிக்கை கொடுக்கும் படங்கள். இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி அடைய வேண்டும்.  அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும். என்று கார்த்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன், சர்தார் திரைப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்து உள்ளோம்.  நடிகர் கார்த்தியை மிகவும் கொடுமை செய்தேன் என கூறினார்.  இவர்களைப் போல் நடிகைகள் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் சர்தார் படத்தில் பணி புரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

First published:

Tags: Actor Karthi