முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'என்ன ஒரு சிறந்த படம்...' டாடா திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி பாராட்டு..!

'என்ன ஒரு சிறந்த படம்...' டாடா திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி பாராட்டு..!

கார்த்தி

கார்த்தி

கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி வெகுவாக பாராட்டியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், 'முதலும் நீ முடிவு நீ' ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தற்போதைய சூழலில் இருக்கும் ஒரு இளைஞனின் பின்னணியில் டாடா திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெறுகின்றன. இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

டாடா திரைப்படம் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த திரைப்படம் வெளியான 20 நாட்களில் தமிழகத்தில் 15 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, என்ன ஒரு சிறந்த திரைப்படம் என டாடாவை பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்த கவின் உள்ளிட்ட அனைவரின் நடிப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் இயக்குனர் கணேஷ் கே.பாபுவின் இயக்கத்தையும் அவரின் படமாக்குதல் முறையையும் சுட்டிக்காட்டி வாழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே தமிழில் வெளியாகும் சிறந்த சிறிய படங்களை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Karthi