Home /News /entertainment /

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்…

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்…

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

மொத்தம் மூன்று பாடல்களை கொண்டதாக விருமன் ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    விருமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை தொடர்ந்து, நடிகர் கார்த்தி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் விருமன் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களை தவிர பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோரும் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.



    பூப் போல மனசு ஏறாத வயசு... ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்

    இதையொட்டி விருமன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    விருமன் ட்ரெய்லரைப் பார்க்க..



    விருமன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து முன்பு வெளியான கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் யூடியூபில் 3 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை தவிர்த்து நேற்று இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன.

    கமலின் விக்ரமை தொடர்ந்து மம்மூட்டி படத்தில் ஏஜெண்ட் டீனா!

    மொத்தம் மூன்று பாடல்களை கொண்டதாக விருமன் ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.



    இந்த நிலையில் நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். கோயிலுக்கு கார்த்தி நடந்துசெல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இதேபோன்று கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி